Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த வழியா எப்படி போறது…? சிரமப்படும் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

பாலத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்புறப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை சுங்கத்திலிருந்து காக்காகொத்தி பாறை, வெப்பரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் வழியாக பொதுமக்கள் செல்கின்றனர். இந்த பாலத்தின் கரையோரம் குடிநீர் குழாய்கள் மற்றும் தனியார் தோட்டங்களுக்கு செல்லும் குழாய்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தொடர்ந்து தண்ணீர் பாலத்தில் தேங்கி நிற்பதால் பாலம் சேதமடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றி குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |