சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சிறுமியின் தந்தை அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் தனது கணவரை கண்டித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.