ஆடு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி பகுதியில் ஆடு வியாபாரியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானு என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இழந்த செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக செல்வத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.