Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து கவுன்சிலர் இப்படி செய்யலாமா….? சிறுமிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக பஞ்சாயத்து கவுன்சிலரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள மத்தளம்பாறை யில் வீராச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை துணை அமைப்பாளராக இருக்கிறார். மேலும் குணராமநல்லூர் பஞ்சாயத்து 15-வது வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இந்நிலையில் வீராச்சாமி அப்பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வீராச்சாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |