Categories
மாநில செய்திகள்

“‘கடவுளே ஆக்கிரமித்தாலும் அகற்றப்படும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி…..!!!!!

பொது இடத்தை அபகரித்து புது கோவில்களை கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கடவுளின் பெயரால் பொது இடத்தை அபகரித்து கோவில் கட்டி நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

ஆகவே பொது இடத்தை கடவுளே அபகரித்து இருந்தாலும் அதை அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் சாலையை ஆக்கிரமித்து மாரியம்மன் கோவில் கட்டப்பட்டு இருப்பதாக பாப்பாயி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த புகாரில் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |