புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம்-துத்திக்குளம் சாலையில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகில் சிலர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் முருகன், கண்ணன் பாக்கியசெல்வம் ஆகிய 3 பேரும் இணைந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து முருகன், கண்ணன் மற்றும் பாக்கிய செல்வம் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 125 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.