எலக்ட்ரீஷன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டையில் எலக்ட்ரீசியனான நல்லசிவம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கணபதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நல்லசிவத்திற்கு கடன் சுமை அதிகமாக இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நல்லசிவம் தனது மனைவியிடம் சொல்லாமல் வெளியூருக்கு சென்றுவிட்டார். எனவே தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கணபதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் கணபதியை தொடர்பு கொண்ட நல்லசிவம் கடன் சுமை அதிகமாக இருப்பதால் இனி என்னால் வாழ முடியாது.
எனவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் தான் சுந்தரபாண்டியபுரம் அருகில் இருக்கும் ஒரு காட்டுப்பகுதியில் இருப்பதாக கூறிவிட்டு நல்லசிவம் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மயங்கிய நிலையில் கிடந்த நல்லசிவனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நல்லசிவம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.