முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி கிராமத்தில் ராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராமன் காரியாபட்டி பஜார் அருகில் இருக்கும் டீக்கடை முன்பு படுத்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்தவர்கள் அவரது மகன் கணேசனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கணேசன் டீக்கடை முன்பு படுத்திருந்த தனது தந்தையை எழுப்பியுள்ளார்.
அப்போது எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே விஷம் குடித்து விட்டேன் என முதியவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் உடனடியாக தனது தந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராமன் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.