கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள வீராணம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் 13 பேருடன் இருக்கன்குடியில் நடைபெற்ற காதணி விழாவிற்கு வேனில் சென்றுள்ளார். இந்த வேனை சின்ன துரை என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி-சாத்தூர் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது.
இந்த விபத்தில் சதீஷ்குமார், சின்னதுரை உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 7 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.