Categories
மாநில செய்திகள்

வேலை இல்லையா நோ டென்ஷன்….இளைஞர்களுக்கு மார்ச் 27-ல்….வெளியான செம குட் நியூஸ்….!!!

திருச்சியில் வருகிற மார்ச் 27ஆம் தேதி அன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், தமிழ்நாடு அரசு பல துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப TNPSC போன்ற பல தேர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அரசு சார்பில் இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகளை அறிவித்து  வருவதை போல், தனியார் நிறுவனமும் தமிழகத்தில் பல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றது.

அந்த வகையில் தற்போது திருச்சி மாவட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம், ஜமால் முகமது கல்லூரி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு, யங் இந்தியன் அமைப்பு ஆகியவை சார்பில் ஜமால் முகமது கல்லூரியில் வைத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

மேலும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தென்னிந்திய மாநிலங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் இளநிலை, முதுநிலை தேர்ச்சி பெற்ற மற்றும் இறுதி ஆண்டு படிப்பவரும், அனைத்து துறை மாணவர்களும் பங்கேற்கலாம். இதையடுத்து 10, 12 மற்றும் டிப்ளமோ படித்த மாணவர்களும் இம்முகாமில் பங்கு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்கள் சுய விபரங்களை இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பக் கட்டணம் எதுவும் தேவை இல்லை. இதனை தொடர்ந்து நேர்முக தேர்வு, துறை சார்ந்த கலந்தாய்வு மற்றும் தகுதி தேர்வில் கலந்துகொள்ள மாணவர்கள் தயாரான நிலையில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது குறித்து மேலும் விவரங்களை அறிய,  9944943240 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |