ஜாஸ்மின் கிரோகன் என்று பெண் ஒருவர் தனது வலைதள பக்கத்தில் தனது காதல் கதை பற்றி கூறியுள்ளர்.
கனடாவைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் கிரோகன். இவர் தனது காதல் கதையை பற்றி இணையதள பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “நான் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் சென்று இருந்தேன். அப்போது மெக்காலே முர்ச்சி என்பவர் கடையின் வெளியே வீடுகூட இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நான் அவர் மீது கருணை பட்டு காசு கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம் காசு வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
இதற்குப்பின் நான் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பியபோது அவர் என்னிடம் இதனையெல்லாம் நான் எடுத்து வருகிறேன் என்று மெக்காலே கூறினார். சரி என்று இருவரும் பேசிக்கொண்டே நடந்து வந்தோம். அப்போது அவரை சாப்பிட வீட்டுக்கு வரும்படி அழைத்தேன். பின்பு இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு அவரிடம் நான் ஒரு மொபைலை கொடுத்தேன். நீண்ட நாட்களாக பேசி வந்த எங்கள் இடையே காதல் மலர்ந்தது. பின்பு நான் அவரை வேறு ஒரு நபராக மாற்றி அவருக்கு வேலையும் வாங்கி கொடுத்தேன்.
இந்த நிலையில் நாங்கள் இருவரும் சந்தித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது இருப்பினும் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் ஒரு சிறந்த தந்தையாகவும், ஆச்சரியமளிக்கும் தோழனாகவும் என்னிடம் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் விரைவில் நாங்கள் திருமணம் செய்துகொண்டு மிசஸ் மெக்காலேவாக மாற போகிறேன் என்று கூறியுள்ளார். ஜாஸ்மின் கிரோகன் பேசிய இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது