பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று பலரும் கூறுவார்கள், அனால் இன்றய நாட்களில் பெண்களை வெளியில் அனுப்பவே தயங்குகிறார்கள். அதற்கு காரணம் எங்கோ யாரோ செய்யும் தவறே…..
என்ன ஆபத்து வந்தாலும் சில பெண்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்கு சென்று கால தாமதமாக வர நேரிடலாம். அவர்களுக்காக சில அறிவுரைகள் அவர்களுக்கு மட்டுமன்றி மற்ற பெண்களும் தங்களின் பாதுகாப்பிற்காக இதனை பின்பற்றலாம்.
தப்பித்தல்
நீங்கள் தனியாக செல்லும் பொழுது யாராவது சந்தேகப்படும்படி உங்களை பார்த்தாலோ பின்தொடர்ந்தாலோ அந்த இடத்தை முடிந்த வரை விரைவாக கடந்துவிடுங்கள். தனியாக போராட முயற்சிக்க வேண்டாம்.
சந்தேகமான இடத்தை விட்டு நகர்தல்
ஒரு இடம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி இருந்தால் கூடுமானவரை விரைவாக அந்த இடத்தை கடந்திடுங்கள்.
நேர் வழியே சிறந்தது
எப்பொழுதும் தனியாக வரும் பொழுது குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்க வேண்டாம். நேரம் ஆனாலும் நேர் வழியே சிறந்தது.
பகிர்தல்
உங்களை பற்றிய தனிப்பட்ட விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர வேண்டாம். அவர்கள் அதனை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அதனால் வேண்டாம்.
போக்குவரத்து
எங்கு சென்று வந்தாலும் அதிக மக்கள் உள்ள பேருந்து நிறுத்தம் சென்று பேருந்து ஏறுங்கள். உங்களுடன் பயணிப்பவர்களை கவனத்தில் வையுங்கள். எப்பொழுதும் கையில் பணம் வைத்து கொள்ளுங்கள் ஏதேனும் அவசரம் என்றால் ஆட்டோ அல்லது டாக்சி அழைக்க பணம் தேவைப்படும்.
ஆட்டோ அல்லது டாக்சி அழைக்கும் பொழுது ஓட்டுனருடன் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தின் பதிவு எண்ணை படம் எடுத்து வீட்டிற்கோ நண்பருக்கோ அனுப்பி விடுங்கள்.
முக்கியமாக நம் காவல்துறை பரிந்துரைக்கும் காவலன் செயலியை ஆபத்து நேரத்தில் பயன்படுத்துங்கள்.