Categories
அரசியல்

8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் : “சிபிஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!”

மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள ராம்பூர்ஹட் எனும் இடத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் அங்குள்ள குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் குழந்தைகள் உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். அதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் உறுதிமொழி அளித்தார்.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து சம்பவத்திற்கு காரணமானவர்களை விரைந்து கண்டு பிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |