Categories
மாநில செய்திகள்

குன்றத்தூர் முருகன் கோவிலில்… ஏப்ரல் 25ஆம் தேதி… அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!

குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் சுமார் 2 கோடி மதிப்பில் குடமுலக்கு பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், மூன்று கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபத்தில் இடம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி குன்றத்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |