கிணற்றுக்குள் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தில் விவசாயியான நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று நித்யானந்தம் தனது மாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியானந்தம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கிணற்றுக்குள் விழுந்த மாட்டை உயிரோடு மீட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.