அரசு பேருந்து ஓட்டுனரை பள்ளி மாணவன் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயில் பகுதியை சேர்ந்தவர் அரசு பேருந்து ஓட்டுநர் காளிதாஸ். இவர் மாநகர அரசு பேருந்தை ஓட்டி சென்ற போது பேருந்தில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் மிகவும் அட்டகாசம் செய்துள்ளனர். இதனை பொறுக்க முடியாத ஓட்டுநர் காளிதாஸ் போக்குவரத்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதனால் அட்டகாசம் செய்த மாணவர்களை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். அதன் பிறகு பேருந்தில் நான்கு மாணவர்கள் ஏறி அதில் 19 வயதுடைய தினேஷ் என்ற மாணவர் ஓட்டுநர் காளிதாஸை தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் புகாரளிக்க விசாரணை மேற்கொண்ட கீழ்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் மாணவர் தினேஷை கைது செய்ததோடு மற்ற மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்.