தண்ணீரில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கும்ளாபுரத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி துர்கா அப்பகுதியில் இருக்கும் கிணற்றுக்கு அருகில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துர்கா கிணற்றுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு துர்காவின் சடலத்தை மீட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் துர்காவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்