அஜித்திற்காக லைகா நிறுவனம் செய்த செயலை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
முன்னணி நடிகரான அஜித் தற்போது ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே அஜித்தின் 62வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகி இருந்தன. இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார்.
அஜித்தின் 62வது திரைப்படத்தில் அஜித் நடிக்க லைகா நிறுவனத்திடம் சம்பளமாக நூறு கோடி வேண்டும் என கேட்டதற்கு லைகா நிறுவனம் 100 கோடி என்ன மேலும் 5 கோடி சேர்த்து 105 கோடியாக தருகின்றோம் என கூறிய செய்தி இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.