ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற செயலாளர் இருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோத்தால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் பாடாலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.