Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இது அரசுக்கு சொந்தமான நிலம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. வேதனையில் விவசாயிகள்….!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை அதிகாரிகள் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாயிகள் அரசுக்கு சொந்தமான வாய்க்கால் பகுதியை  ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமித்த இடத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றியுள்ளனர்.

இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இதுபோன்று அரசு நிலங்களை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நிலங்களை கோர்ட்டு உத்தரவுபடி நீர்நிலை அகற்றி வருகிறோம்.அதைபோல்  பூவனூர், ராயபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்ற போவதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |