கொரோனா தொற்று காரணமாக சிறிது காலம் விளையாட்டு அரங்கத்திற்குள் பார்வையாளர்களை அனுமதிக்காத நிலையில் ஐ.பி.எல் போட்டி அமைப்பு குழு சார்பில் ஒரு செய்தி ஒன்று வெளியிடப்பட்டடுள்ளது. அந்த செய்தி குறித்து கூறியுள்ளதாவது கொரோனா தொற்று காரணமாக ஒரு குறுகிய இடைவெளிக்கு பிறகு ஸ்டேடியத்துக்கு திரும்பும் ரசிகர்களை ஐ.பி.எல். போட்டி வரவேற்கிறது.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டதோடு மும்பை, நவிமும்பை, புனேயில் நடைபெறும் இந்த போட்டியானது மிகவும் முக்கியமான தருணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு போட்டிக்கான டிக்கெட்கள் விற்பனையாகி வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.