அனைத்து வார்டுகளிலும் துப்பரவு செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகராட்சி தலைவராக பதவியேற்ற சுந்தரலிங்கம் தேவகோட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையின்படி தேவகோட்டை மாநகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் அமைந்துள்ள கண்மாய், குளம் போன்ற பகுதிகளில் இயந்திரம் மூலம் துப்பரவு செய்யும் பணி நடைபெற்றது. இதனை நகராட்சித் தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், தேவகோட்டை நகராட்சி ஆணையர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.