Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி திரும்பி வராததால்…. லாரி டிரைவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை அடுத்துள்ள பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் தெருவில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு சத்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் சதீஷ்குமாருக்கு மதுபழக்கம் இருந்ததால் அடிக்கடி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சத்யா கணவருடன் கோபித்துகொண்டு பிள்ளைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மீண்டும் சத்யாவை வீட்டிற்கு அழைத்தும் அவர் வராததால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமத்திவேலூர் காவல்துறையினர் சதீஷ்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |