சென்னை ஐஐடி மாணவர்கள் எடுத்துள்ள புதிய முயற்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை ஐஐடி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ராபர்ட் போஷ் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் வணிக ஆலோசனை நிறுவனமான சூப்பர் பிலிம் ஸ்டுடியோஸ் போன்றவை இணைந்து பாலின இடைவெளியை குறைப்பதற்கான ‘மறைக்கப்பட்ட குரல்கள்’ என்ற முயற்சியைத் தொடங்கி இருக்கின்றன. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர் சங்கத்துடன் இணைந்து நடக்கும் இந்த முன்முயற்சி விக்கிப்பீடியாவில் இருந்து தொடங்குகிறது.
இன்னும் ஓராண்டுக்குள் அதிலும் குறிப்பாக அடுத்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கு சிறப்புடைய பல பெண்களின் சுய சுயசரிதைகளை தானாக உருவாக்குவது என நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்து இருக்கின்றனர். இதன் மூலம் டிஜிட்டல் ஆதாரங்கள் இடையே பாலின பிரதிநிதித்துவத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். மேலும் சென்னை ஐஐடியின்3 முன்னாள் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய சூப்பர் பிலிம் ஸ்டுடியோஸ் 3 கண்டங்களில் இந்த நடைமுறையை கட்டமைத்து இருப்பதை மறைக்க குரல்கள் குழு பெருமிதத்துடன் கூறுகிறது.
இந்த முன்முயற்சியில் தன்னார்வத்துடன் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் பதிவுசெய்து செய்யலாம். http://hiddenvoices.xyz/ பல்வேறு நுகர்வோர் தொடர்பு சேவைகளின் அடிப்படையை இயற்கை மொழி மாதிரிகள் அதிகளவில் உருவாக்குகின்றன.இந்த முன்முயற்சி செயல்படுத்தப்படும் விதம் பற்றி பேராசிரியர் பலராமன் ரவீந்திரன் கூறியபோது, மனிதன் செயற்கை நுண்ணறிவை செயல்படுத்துவதில் இந்த திட்டம் ஒரு உதாரணமாக அமையும். தானியங்கி செயலாக்கம் கணிசமான அளவுக்கு முன்னேறி உள்ளபோதிலும் செயற்கை நுண்ணறிவு கிளைகளை உருவாக்கிவிடும் சூழ்நிலை இருக்கிறது.
அதிலும் குறிப்பாக குறைந்த மக்கள்தொகை ஊழியர்களைப் பற்றிய ஆவணங்களை செயலாக்கும் போது ஏற்படும் பிழைகளை இந்த திட்டம் தீர்க்க பெரிதும் முயற்சி செய்கிறது. எனவே செயற்கை நுண்ணறிவு தீர்வுகளின் சாதகமான அம்சங்களை இயன்ற அளவுக்கு உபயோகப்படுத்தும். மேலும் உயர்தர வெளியீடுகளை உருவாக்க மனித மேற்பார்வை மற்றும் சரிபார்ப்பு நியாயமான முறையில் பயன் படுத்துவோம் என பேராசிரியர் கூறியுள்ளார்.