Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 2,000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!!

காவல்துறையினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல் அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கச்சிராப்பாளையம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மல்லிகைப்படி வனப்பகுதியில் பெரிய பேரல்கள் இருந்தது. உடனே காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அதில்  சாராய ஊறல் இருந்தது தெரியவந்தது. அதில் மொத்தம் 2,000 லிட்டர் இருந்தது. இதை காவல்துறையினர் கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாராய ஊரலைப் பதுக்கி வைத்திருந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |