இளம்பெண் குளிப்பதை வாலிபர் செல்போனில் வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டிவலசு பகுதியில் 26 வயது இளம்பெண் வாடகைக்கு வீடு எடுத்து போட்டி தேர்வுகளுக்கு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் இளம்பெண் வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜன்னல் துவாரத்தில் செல்போன் லைட் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக உடையை மாற்றிக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்துள்ளார்.
அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் கோழி இறைச்சி கடை உரிமையாளரான கண்ணன் என்பவர் இளம்பெண் வீட்டு மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதனைப் பார்த்த இளம்பெண் வீட்டிற்குள் ஓடினார். அப்போது கண்ணன் இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து நீ குளிப்பதையும், உடை மாற்றுவதையும் வீடியோவாக படமெடுத்து வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார். மேலும் எனது ஆசைக்கு நீ இணங்கவில்லை என்றால் வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என அந்த வாலிபர் மிரட்டியுள்ளார்.
இதனை யாரிடமாவது கூறினால் உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என கண்ணன் கத்தியை காட்டி மிரட்டியதால் அந்த இளம்பெண் அலறி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் கண்ணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.