பெண் 4 வயது சிறுமியை கடத்தி செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மதிய உணவு இடைவேளையின் போது பெண் ஒருவர் கையில் கலர் பாட்டிலுடன் நுழைவு வாயில் முன்பு நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை கலர் பாட்டிலை காண்பித்து அந்த பெண் அழைத்துள்ளார். அப்போது அருகில் வந்த சிறுமியை தூக்கிக்கொண்டு அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதனை பார்த்த ஆசிரியர் உடனடியாக அந்த பெண்ணை விரட்டி சென்று அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்து விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் அவர் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வாசுகி என்பதும், குழந்தையை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்ணை காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாசுகியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.