கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மாசு குறைந்துள்ளது.
உலக நாடுகளில் கடந்த 2020-ஆம் ஆண்டில் இருந்து கொரோனா நோய்த்தொற்று பரவியது. இதன் காரணமாக அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது. இந்த ஊரடங்கின் போது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மாசு குறைந்துள்ளது. அதாவது போக்குவரத்து முடக்கப்பட்டதால் நதி நீரின் தரம் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஆக்சிஜன் அளவும் அதிகரித்துள்ளது. மேலும் மும்பை , பரிதாபாத், குருகிராமம், டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் பி.எம்2.5, பி.எம் 10, எஸ்.ஓ 2, என்.ஓ 2 ஆகியவற்றின் சரிவுகள் குறைந்துள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.