கும்பம் ராசி அன்பர்களே…! உதவி பெற்று நன்றி மறந்தவர்களை மன்னித்து விடுவீர்கள்.
தொழில் வியாபாரம் செழிக்க கடுமையான உழைப்பு தேவைப்படும். அளவான பணவரவு கிடைக்கும். பெண்கள் தாய்வீட்டு உதவி கேட்டு பெறுவார்கள். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். சக பணியாளர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். சகோதரரிடம் இருந்த பிரச்சினை சரியாகும். தாய் தந்தையார் உடல்நிலையில் கவனம் வேண்டும். கணவன்-மனைவி இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். குழந்தைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் நல்ல பெயர் எடுப்பீர்கள். சில நபர் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருக்கும். யாரையும் பகைமை கொள்ள வேண்டாம். வசீகரமான பேச்சால் எதையும் சாதிப்பீர்கள். எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கணவன்-மனைவி இடையே அன்பு நிலைத்து காணப்படும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கை கையாளுங்கள். மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை பாடங்களைப் படியுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு வைத்து சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 9.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.