தமிழகத்தில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறையில் வழக்கத்தைவிட அதிகமான லாபம் கிடைத்துள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 2020-21 ஆம் திருத்திய வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் வணிகவரி 96,109.66 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வணிகவரித்துறை 24.03.22 தேதி வரை 1,00,346.01 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதேப்போன்று பதிவுத்துறையில் 2021-22 ஆம் ஆண்டின் திருத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையின் படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 13,252.67 கோடி ரூபாயாகும். ஆனால் 24.03.22 தேதி வரை பதிவுத்துறை 13,406.51 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் நடப்பு ஆண்டுகளில் வருமான வரித்துறை மற்றும் பதிவுத் துறைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை விட அதிகமான வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.