மீனம் ராசி அன்பர்களே…! நண்பர்களின் உதவியால் பெருமையை ஈட்டிக் கொள்வீர்கள்.
செயலில் புதிய செயல் உருவாகும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற அதிகம் பணிபுரிவீர்கள். இனிய அணுகுமுறையினால் மற்றவர் பார்வை உங்கள் மீது விழும். பணவரவு சீராக இருக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வெளியிடங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். சக நண்பர்களால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். எந்த பிரச்சனை வந்தாலும் திறம்பட சமாளித்து காட்டுவீர்கள். பழைய பிரச்சினைக்கும் இன்று தீர்வு காண்பீர்கள். உங்கள் சாதுரியத்தால் வெற்றிகரமாக எதையும் செய்வீர்கள். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். வீண் அலைச்சல் இருப்பதால் உடல் நிலையில் கவனம் வேண்டும். கைகால் பிரச்சனை இருக்கும். சேமிக்கும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்பாடு அவசியம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் வரும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை.
கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல உறவு இருக்கும். மாணவக் கண்மணிகள் நல்லபடியாக படியுங்கள். படித்ததை எழுதிப் பாருங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைத்து சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக வைத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி கடவுளை வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்ட எண் 7 மற்றும் 9.
அதிர்ஷ்ட நிறம் கரு நீலம் மற்றும் பச்சை நிறம்.