Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“கன்னி ராசிக்கு”….அலைச்சல் அதிகரிக்கும்…..கோபம் வேண்டாம்…!!!!

 கன்னி ராசி அன்பர்களே….!!! இன்று எதார்த்த பேச்சு சிலர் மனதை கொஞ்சம் பாதிக்கலாம், பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடுகள் அவசியம். தொழில் வியாபாரத்தில் இடையூறுகளையும் சரிசெய்வீர்கள். அளவான பணவரவு கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை  பின்பற்றவும். இன்று  விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைகாக பாடுபடுவீர்கள்.
அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது, அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது ரொம்ப நல்லது. குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள், பெண்களுக்கு எதிலும் மெத்தனமான போக்கு இன்று காணப்படும்.  வீண் அலைச்சல்களும் இருக்கும், கோபத்தை குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மையை கொடுக்கும்.
இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும் அது மட்டுமில்லாமல் சூரிய பகவான் வழிபாட்டையும்,  சிவபெருமான் வழிபாட்டையும் ஒருசேர வணங்குங்கள்.  உங்களுக்கான காரியம் அனைத்துமே சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
 அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் பச்சை

Categories

Tech |