Categories
சினிமா

நிஜ துப்பாக்கியுடன் RRR பார்க்க வந்த ரசிகர்…. கைது செய்த போலீஸார்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழ் திரையுலகில் பிரமாண்டமான நிலையில் ராஜமவுலியின் இயக்கத்தில் நேற்று வெளியான RRR திரைப்படம்  நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. மேலும் படத்தின் காட்சிகள் குறித்து ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் அன்னபூர்ணா தியேட்டரில் ஒரு நபர் நிஜமான துப்பாக்கியை எடுத்து வந்துள்ளார்.

அவரது பெயர் பாலாஜி நீண்ட தாடி மற்றும் தலை முடியை கொண்ட அவர் பார்ப்பதற்கு ரவுடி போன்று காட்சியளித்தார். பின் அவரது கையில் இருப்பது நிஜமான துப்பாக்கியா என்று கேட்டதற்கு ஆம் நிஜமான துப்பாக்கி இதில் ஒரு புல்லட் மட்டுமே உள்ளது என்று கூறினார். உடனே அருகில் உள்ள லோக்கல் போலீசார் அவரை கைது செய்து துப்பாக்கியை பறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |