Categories
உலக செய்திகள்

“கண்ணை பறிக்கும் வண்ணங்கள்”…. கடற்கரையை நோக்கி படையெடுக்கும் நண்டுகள்…. சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளின் தகவல்….!!

பல வண்ணங்களில் உள்ள  நண்டுகள் கடற்கரையை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்ல ஆரம்பித்துள்ளது.

கியூபா நாட்டில் உள்ள கடற்கரைக்கு ஆண்டு தோறும் நண்டுகள் கூட்டமாக செல்வது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் நண்டுகள் கூட்டம் கூட்டமாக கடற்கரையே நோக்கி செல்கின்றன.  கொரோனா காலத்தில் வாகனப் போக்குவரத்து குறைவாக காணப்பட்டதால் நண்டுகளின் எண்ணிக்கையானது முன்பைவிட அதிகமாகியுள்ளது என்று அந்நாட்டின் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் இது குறித்து அவர்கள் கூறியதாவது “ஒவ்வொரு வருடமும் இதே போல் சாலையைக் கடக்கும் நண்டுகள் பல வாகனங்களில் சிக்கி செத்துப் போகிறது. கடந்த இரண்டு வருடமாக வாகன போக்குவரத்து குறைவாக காணப்படுவதால் நண்டுகளின் எண்ணிக்கையானது அதிகமாக காணப்படுகிறது” என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Categories

Tech |