கலைஞர் தொலைக்காட்சி, விக்ரம் நடிப்பில் வெளியான துருவ நட்சத்திரம் மற்றும் மகான் படங்களின் தொலைக்காட்சி உரிமைகளை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லலித்குமார் செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் இந்த 2 படங்களையும் தயாரித்துள்ளார்.
தற்போது வெளியான தகவலின்படி, கலைஞர் தொலைக்காட்சி இந்த இரண்டு படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து சுமார் 15 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பல சூப்பர் ஹிட் படங்களின் சாட்டிலைட் உரிமைகளை கலைஞர் தொலைக்காட்சி வாங்கி வெளியிட்டு வருகிறது.