Categories
சினிமா

“ஆர் ஆர் ஆர்” படத்தை தெறிக்கவிட்ட ராஜமௌலி… இணையத்தில் மாஸ் காட்டும் ஹேஷ்டேக்…!!!

ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ஹேஷ்டேக்குகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படமானது பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை பெற்றிருந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இத்திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் தங்களை கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் ராஜமௌலி மீண்டும் ஜெயித்துவிட்டார் எனவும் ரசிகர்களையும் சினிமாவையும் நன்கு புரிந்து வைத்திருக்கிறார் எனவும் பாராட்டி வருகின்றனர். ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை போற்றி கொண்டாடும் வகையில் #RRRreview, #SSRajamouli, #RRR, #Ramcharan, #RRRMovie, #JrNTR உள்ளிட்ட ஹேஷ் டேக்களை வைத்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த ஹேஷ் டேக்குகளில் #RRRreview என்ற இந்த ஹேஷ்டாகானது இந்திய அளவில் டிரெண்டாகி டாப்பில் உள்ளது.

Categories

Tech |