Categories
தேசிய செய்திகள்

OMG: கழுத்தறுக்கப்பட்ட நிலையில் 17-வயது சிறுவன் சடலம்….சூட்கேசில் கண்டெடுப்பு…பெரும் பரபரப்பு…!!!

சிறுவன் ஒருவனின் சடலம் சூட்கேசுக்குள் வைக்கப்பட்டு டெல்லியில் ஒரு பகுதியில் கிடந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி என்ற பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென மாயமாகி உள்ளான். இதையடுத்து அவனது பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை மன்கோல்புரி என்ற பகுதியில் உள்ள பீர் பாபா பஜார் பகுதியில் சூட்கேஸ் ஒன்று சந்தேகப்படும்படியாக கேட்பாரற்று கிடந்துள்ளது.

உடனே அதை கவனித்த உள்ளூர்வாசிகள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சூட்கேசை திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் சிறுவன் ஒருவனது சடலம் கழுத்து அறுக்கப்பட்டு, சூட்கேசுக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து இதுபற்றி அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து காணாமல் போன சிறுவர்களின் பட்டியலை பெற்றுள்ளனர்.

அதில் ரோஹினி பகுதியை சேர்ந்த சிறுவனின் சடலம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் சிறுவன் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்றும் யார் கொலை செய்து சூட்கேசில் வைத்துள்ளனர் என்பது குறித்த தகவல்களை தீவிரமாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |