Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். மையம் சென்ற பெண்…. வாலிபரின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

நகையை  திருட முயன்ற   வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்பாள்புரம்  பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வைரக்கல் பதித்த 2 3/4 பவுன் தங்க நகையை  கடைக்கு சென்று மாற்றுவதற்காக தனது தங்கையுடன் அம்பேத்கார் சிலை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த ஏ.டி.எம். மையத்திற்கு  பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நகையை வைத்து விட்டு சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் புவனேஸ்வரியின் மோட்டார் சைக்கிளில் இருந்த தங்க நகையை  திருடமுயன்றுள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த  அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் நகையை  திருட முயன்றது லட்சுமி நகரை சேர்ந்த சாரதிராமன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சாரதிராமனை  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |