வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் பொட்டல் பகுதியில் பாண்டிமீனாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லப்பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பாண்டிமீனால் பல இடங்களில் திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். ஆனால் பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்லப்பாண்டி வீட்டில் வைத்து தங்க நகை பாலிஷ் செய்ய பயன்படுத்தும் அமிலத்தை மதுவுடன் கலந்து குடித்துவிட்டு மயங்கியுள்ளார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த செல்லப்பாண்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே செல்லப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.