Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் வீடு வாங்க விரும்புவோருக்கு…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க 5 ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. பிரபல வங்கியான எஸ்பிஐக்கு வாடிக்கையாளர்கள் 45 கோடிக்கும் மேல் உள்ளனர். இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி மலிவு விலையில் வீடுகளை விற்க கேப்ரி குளோபல் ஹவுசிங் பைனான்ஸ், ஸ்ரீராம் ஹவுசிங் பைனான்ஸ், பிஎன்பி ஹவுசிஸ் பைனான்ஸ், ஐஐஎஃப்எல் ஹோம் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.

இதுகுறித்து பேசிய எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காரா, “இந்தக் கடன் திட்டம் குறைந்த விலையில் சிறு வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். அதேபோல் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் எஸ்பிஐ வங்கி குறைந்த செலவில் வீட்டுக் கடன் வழங்குவதற்காக கூட்டணி அமைத்துள்ளது என்று ஐஐஎஃப்எல் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அறிக்கையில் கூறியுள்ளது.

Categories

Tech |