விதிகளை மீறி கட்டப்பட்டும் கட்டிடங்களின் முகவரி மற்றும் உரிமையாளர்களின் விவரங் களை வெளியிட சிஎம்டிஏ முடி வெடுத்துள்ளது. சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் புற்றீசல் போல பெருகிவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சியும் விதி மீறிய கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண் டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
சென்னை மவுலிவாக்கத்தில் விதிகளை மீறிகட்டப்பட்ட 11 மாடி கட்டிடம் கடந்த ஆண்டு இடிந்து விழுந்தது தொடர்பான வழக்கு, கடந்த செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி, “கட்டிடம் கட்ட அளிக்கப்பட்ட திட்ட வரைபட ஒப்புத லுக்கு மாறாக,விதிகளை மீறி கட்டிடம் கட்டியிருப்பவர்களின் பட்டியலை தனது இணையதளத் தில் சிஎம்டிஏ இனி வெளியிடும்,” எனத் தெரிவித்தார். அது பொதுமக்கள் மற்றும் ஆர்வலர் களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. 5,000 சதுர அடி வரையிலான கட்டடங்களுக்கு மண்டல அலுவலகங்களில் அனுமதி பெறவும், 5,001-10,000ச.அ வரையிலான கட்டடங்களுக்கு ரிப்பன் மாளிகையில் அனுமதி பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறும் கட்டிடங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து, சில மாதத்திற்கு பிறகு சீல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.