ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் சந்திப்பு ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு ரயில்வே ஊழியர்கள் சார்பில் எஸ்.எம்.ஆர்.யூ தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு எஸ்.எம்.ஆர்.யூ தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார்.
இவர்கள் ரயில்வே அதிகாரிகளின் தொழிலாளர் விரோதப்போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கோட்ட உதவியாளர் சுனில் குமார், முன்னாள் உதவி கோட்ட பொறியாளர் சசி ,பொருளாளர் லட்சுமணன் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.