பேருந்து மோதி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவருக்கு செர்பியா ஜிபி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர் இரவு பணி முடிந்து வீட்டிற்கு கிளம்பினார். இவர் தக்கலை அருகே சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி பேருந்து மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது .
இந்த விபத்தில் அனிராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அனிராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநர் ரெதீஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.