Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

18 வயசு ஆகல…. “அதுக்குள்ள 11ஆம் வகுப்பு மாணவிக்கு கல்யாணமா”…. தடுத்து நிறுத்திய சைல்டு லைன்..!!

வேலூர் அருகில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலகத்தினர் தடுத்து நிறுத்தினர்.

வேலூர் மாவட்டம், பாகாயம் மேட்டுஇடையம்பட்டியில் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைப்பதாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின்பேரில் சைல்டு லைன் அணி உறுப்பினர்கள் நாகப்பன், சத்யா, சமூகநலத்துறை ஊழியர்கள், பரிமளா, கல்யாணி மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது லத்தேரி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், இடையம்பட்டி பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும் சிறிது நேரத்திற்குள் அங்குள்ள கோவில் திருமணம் செய்து வைப்பதாக தெரியவந்துள்ளது. இதை அடுத்து சைல்டு  உறுப்பினர்கள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பின் மாணவியின் பெற்றோரிடம் பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று எழுதி வாங்கி கொண்டுள்ளார்கள். இதைத்தொடர்ந்து அந்த மாணவியை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குழந்தை நல குழுமத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |