Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உச்சகட்ட பரபரப்பு… இராணுவ கட்டளை மையம் மீது ஏவுகணை தாக்குதல்…!!!!

உக்ரைன் ராணுவ கட்டளை மையம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது.

உக்ரைன் மீது  ரஷ்யா தொடர்ந்து 31 வது  நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி  வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை  கைப்பற்ற விவரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள்  முயற்சி செய்த போதும் அவை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் இராணுவ கட்டளை மையம் மீது ரஷ்யா  தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை அறிவித்துள்ளது. மத்திய உக்ரைனில் உள்ள வினிஸ்டியா நகரில் இராணுவ கட்டளை மையத்தை குறிவைத்து ரஷ்ய ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த ஏவுகணை தாக்குதலில் இராணுவ கட்டளை மையத்தில் கட்டிடம் பெரும் சேதம் அடைந்தது என உக்ரைன் விமானப்படை அறிவித்துள்ளது.

Categories

Tech |