மராட்டிய முதல்-மந்திரி நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே சட்டசபையில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளில் நான் சிறை செல்ல தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதாவது உங்களுக்கு பதவி வேண்டும் என்றால் பென்டிரைவ்களை சேகரிக்க வேண்டாம். அதன் விலை அதிகரித்துவிட்டது. நான் உங்களுடன் வருகிறேன். என்னுடைய குடும்பத்தினரை கஷ்டப்படுத்தி சொத்துக்களை பறிமுதல் செய்வதால் நான் அச்சம் அடையவில்லை. அதற்காக உங்களுடைய குடும்பத்தினரை நான் துன்புறுத்த மாட்டேன், வேண்டுமென்றால் என்னை சிறையில் அடைத்து விடுங்கள்.
இந்நிலையில் பா.ஜ.க அரசு மற்ற கட்சி தலைவர்களின் குடும்பத்தினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இவ்வாறு நடக்க நடவடிக்கை எடுக்க பட்ட நபர்களுக்கு விசாரணை கூட நடத்தாமல் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். அதன்பிறகு நீதிபதி தன் முன் வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தண்டனை வழங்குகிறார். மேலும் சிவசேனா கட்சியின் தொண்டர்கள் மீது ஏதேனும் பாவங்கள் இருப்பின் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
கடந்த 1992-ம் ஆண்டு மும்பையில் நடந்த கலவரத்தின் போது சிவசேனா கட்சியினர் தங்களது உயிரை பணையம் வைத்து மக்களை காப்பாற்றினார்கள். இப்படி மக்களை காப்பாற்றிய சிவசேனா தொண்டர்களை துன்புறுத்தாதீர்கள். சில பா.ஜக. தலைவர்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் முகவர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். மேலும் பா.ஜ.க அரசு நாட்டை ஆண்டாலும் மும்பையில் அதிகாரத்தை பிடிக்க விரும்புகிறது என்று கூறினார்.