மாணவர்களின் நலன் கருதி முதுநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் பணிகள் நிரப்பப்படாமல் இருக்கிறது. மொத்தம் 2,774 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதன்காரணமாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதுகலை ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பள்ளிக்கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிக்கல்வித்துறை தற்போது உணர்ந்துள்ளது. இதன்காரணமாக மாநிலங்கள் முழுவதும் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து 5 மாதங்கள் மட்டுமே முதுநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக நியமித்துக் கொள்ள வேண்டும். என பள்ளி கல்வித்துறையின் மேல்நிலை இணை இயக்குனர் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் இது தாமதமான முடிவு என்று பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.