மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக மன உளைச்சலை ஏற்படுத்திய ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டையில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சந்தானம் என்பவர் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நான்கு மாணவிகள் குழந்தைகள் நல வாரிய குழுவில் புகார் அளித்துள்ளனர். அதன்பின் குழந்தைகள் நல வாரிய குழுவினர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தானத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.