Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயல் அனுமன் நகரில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சூர்யாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |