Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“வேலையை ராஜினாமா பண்ணுங்க” தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்காளிபாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சாந்தி செங்காளிபாளையத்தில் இருக்கும் கண்ணனின் சொந்த வீட்டை விற்று பெற்றோருடன் சேர்ந்து வாழலாம் என தெரிவித்துள்ளார். இதில் விருப்பம் இல்லாத கண்ணன் சாந்தியின் வற்புறுத்தலால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விற்று அதில் வந்த பணத்தில் சாந்தியின் தாயார் வீட்டிற்கு அருகில் ஒரு இடத்தை வாங்கியுள்ளார்.

இதனையடுத்து சாந்தி தனது கணவரிடம் உங்களது வேலையை ராஜினாமா செய்து விட்டு பெற்றோருடன் வரவேண்டும் என கூறியுள்ளார். மனைவி கூறியதைக் கேட்டு கண்ணன் வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின் மன உளைச்சலில் இருந்த கண்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |